நீர்ச்சத்து அதிகமாக உள்ள நாட்டு காய்களில் ஒன்றான சுரக்காய் வைத்து எப்பொழுதும் கூட்டு, பொறியியல், அவியல் என செய்து சலித்து விட்டதா, ஒரு முறையாவது சுரக்காய் வைத்து முறுமுறுவென தோசை செய்து சாப்பிடுங்கள். சுரைக்காயா வேண்டாம் என அடம் பிடிக்கும் குழந்தைகளும் வேண்டும் வேண்டும் என கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
சுரைக்காய் – இரண்டு கப்
கருவேப்பிலை – கைப்பிடி அளவு
அரிசி மாவு – ஒரு கப்
ரவை – ஒரு கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிய துண்டு
மல்லி இலை – கைப்பிடி அளவு
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
சுரைக்காயை நன்கு கழுவி சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். நறுக்கிய சுரைக்காய் கருவேப்பிலை சேர்த்து மிக்ஸி ஜாரில் மையாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த அந்த விழுதுகளை ஒரு பெரிய பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும். அதில் அரிசி மாவு, கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து கலந்து கொள்ளவும். இதில் சீரகம், மிளகுத்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இறுதியாக இந்த கலவையில் பொடியாக நறுக்கிய மல்லி இலைகளை கலந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது மாவு தயாராக உள்ளது. தோசை கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடானதும் இந்த மாவை மெல்லியதாக தோசை அளவிற்கு வட்டமாக சுட வேண்டும். தேவையான அளவு எண்ணெய் சேர்த்து முறுமுறுவென தோசையை சுட்டெடுக்கலாம். இப்பொழுது சுவையான சுரைக்காய் தோசை தயார்.