அசைவ உணவு சமைப்பது அவ்வளவு எளிதல்ல. பொருத்தமான மசாலாக்கள் இல்லை என்றால் குழம்பில் சுவை இல்லாமல் சென்றுவிடும். பக்குவமாக பார்த்து பார்த்து சமைக்கும் அசைவ குழம்புகள் சில நேரங்களில் சலித்து விடுவதற்கு காரணம் சரியான மசாலா கலவை இல்லாததுதான். நாம் வைக்கும் குழம்பு தெரு வரைக்கும் வாசனை வர வேண்டுமென்றால் இந்த கரம் மசாலா பொடி வீட்டிலேயே செய்து குழம்பில் சேர்த்து பாருங்கள். சுவையும் வாசமும் கமகமவென இருக்கும்.
தேவையான பொருட்கள்
மல்லி – ஒன்றரை தேக்கரண்டி
பெருஞ்சீரகம் – 2 தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
காய்ந்த வத்தல் – 10
மிளகு – ஒரு தேக்கரண்டி
பட்டை – 2
பிரியாணி இலை – 2
ஜாதி பத்திரி – 3
கிராம்பு – ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் – 10
நட்சத்திர சோம்பு -8
ஜாதிக்காய் – ஒன்று
கருப்பு ஏலக்காய் – 3
செய்முறை
முதலில் ஒரு கடாயில் மல்லி சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்ததாக பெருஞ்சீரகம், சீரகம் சேர்த்து ஒன்றாக வாசனை வரும் வரை வடித்து எடுத்துக் கொள்ளவும். மிளகு சூடேறும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். காய்ந்த வத்தல், மிளகு வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக , பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்திரி நட்சத்திர சோம்பு, பிரியாணி இலை இவற்றை ஒன்றாக சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். இறுதியாக ஒரு ஜாதிக்காய் மற்றும் கருப்பு ஏலக்காய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
பஞ்சாபி ஸ்டைல் டேஸ்டான ராஜ்மா மசாலா.. சாப்பிட ஆசையா? அப்போ ரெசிபி இதோ!
வறுத்த இந்த பொருட்களை சூடு ஆறும் வரை தனியாக ஆற வைக்க வேண்டும். அதன் பின் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது நமக்கு கமகம ஊரே மணக்கும் வாசனையில் கரம் மசாலா பொடி தயார். இதை காற்று செல்லாத ஒரு பாத்திரத்திற்கு மாற்றி ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.