விசேஷ நாட்களில் பாயாசம் இல்லாமல் சிறப்பாக இருக்காது. அதிலும் பால் பாயாசம் என்றால் அனைவருக்கும் பிடித்த இனிப்பு வகைகளில் ஒன்று. அதிலும் கல்யாண வீட்டு ஸ்பெஷல் பால் பாயாசம் தித்திப்பாக இருக்கும், அந்த ரெசிபி இதோ!
தேவையான பொருட்கள்
பால் – 1 லிட்டர்
சக்கரை – ஒன்றரை கப்
நெய் – 2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு – 10 முதல் 15
வறுத்த சேமியா – ஒரு கப்
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை
செய்முறை
ஒரு அகலமான கடாயில் 1 லிட்டர் பால் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். அதில் ஒன்றரை கப் சர்க்கரை சேர்த்து கலக்க வேண்டும். சர்க்கரை கரைந்தால் போதுமானது.
அடுத்ததாக ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடானதும் முந்திரி பருப்புகளை வறுத்து கொள்ளவும். பின் அதே நெய்யில் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதித்ததும் நாம் வறுத்து வைத்திருக்கும் சேமியாவை சேர்த்து கலக்க வேண்டும். சேமியா நன்கு கலந்து கொடுத்து வேக வைக்க வேண்டும். ஆனால் சேமியா மையாக வேக வேண்டிய அவசியம் இல்லை, பாதி வெந்தால் போதுமானது.
பள்ளி குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை! வல்லாரை பொடி ரெசிபி!
இறுதியாக நாம் கொதிக்க வைத்திருக்கும் பால் சேர்த்து கிளற வேண்டும், இப்பொழுது வாசனைக்காக ஏலக்காய் தூள் சேர்த்து கலக்க வேண்டும். இப்பொழுது கல்யாண வீட்டு ஸ்பெஷல் பால் பாயாசம் தயார்.