கொழுத்தும் வெயிலுக்கு இதமாக குளுகுளு அவல் மில்க் ஷேக்!

வெயில் அதிகரிக்க அதிகரிக்க குளிர்ச்சியான பானங்களை பருக வேண்டும் என நாம் நினைக்கிறோம். ஆனால் நாம் குடிக்கும் பானங்கள் குளிர்ச்சியானதாக மட்டும் இல்லாமல் உடலுக்கு தீங்கு விளைவிக்காததாகவும் இருக்க வேண்டும். தேவையற்ற ரசாயன பானங்களில் மீது ஈர்ப்பை குறைத்து விட்டு வீட்டிலேயே எளிமையான முறையில் அவள் வைத்து மில்க்ஷேக் செய்து குடிக்கலாம் வாங்க. இந்த மில்க் ஷேக் உடலுக்கு குளிர்ச்சியானது மட்டுமின்றி பல ஊட்டச்சத்துக்களையும் அளிக்க கூடியது. அவல் மில்க் ஷேக் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ….

இந்த மில்க் ஷேக் செய்வதற்கு முதலில் ஒரு தேங்காவை அரைத்து இரண்டு முறை பால் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். வெளிப்புறம் நன்கு வெண்மையாக இருக்கும் தேங்காவை தேர்வு செய்து கொண்டால் தேங்காய் பால் சுவை அருமையாக இருக்கும்.

இந்த தேங்காய் பாலுடன் டேட்ஸ் சிரப், நாட்டு சக்கரை, வெள்ளை பாக்கு இவற்றில் ஏதாவது ஒன்றை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம். இரண்டையும் நன்கு கலந்து ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து விடவும்.

அந்த நேரத்தில் கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து ஒரு கப் அவலை நன்கு வாசனை வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளவும். அவல் நன்கு வாசனை வந்து முறுமுறுவென மாற வேண்டும். இந்த பக்குவத்தில் எடுத்து அவலை ஒரு அகலமான தட்டில் மாற்றி வைத்து விடலாம்.

அடுத்ததாக நன்கு பழுத்து தோல் கருமையாக மாறிய நான்கு வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம். அதன் தோள்களை உரித்து பழத்தை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றி அதனுடன் அரைக்க நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு மசித்து கொள்ளவும். நம்மிடம் வாழைப்பழம் இல்லாத பட்சத்தில் அதற்கு பதிலாக நன்கு தித்திப்பான பழுத்த மாம்பழம், பலாப்பழம் சேர்த்துக் கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிராமத்து ஸ்டைல் ஆட்டுக்குடல் குழம்பு!

இப்பொழுது இறுதியாக ஒரு கண்ணாடி டம்ளரில் அடியில் வறுத்து வைத்த அவல் அதற்கு மேல் மசித்த வாழைப்பழம், அடுத்து அரை தேக்கரண்டி அவல் அதற்கு மேல் மசித்த வாழைப்பழம் என அடுத்தடுத்து அடுக்க வேண்டும். அதன் பின் நம் ஃப்ரிட்ஜில் வைத்திருக்கும் தேங்காய் பாலை ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.

இந்த மில்க் ஷேக்கை மேலும் சுவையாக ஒரு கப் ஐஸ்கிரீமை மேலே சேர்த்துக் கொள்ளலாம். அதனுடன் பொடியாக நறுக்கிய முந்திரி பாதாம் சேர்த்துக் கொண்டால் சுவை அருமையாக இருக்கும். இப்பொழுது சுவையான அவல் மில்க் ஷேக் தயார்.

Exit mobile version