கோடை காலம் தொடங்கியதும் நம் நினைவிற்கு வருவது மாம்பழம் சீசன் தான். மாம்பழம் பழுக்காமல் காயாக இருக்கும் பொழுதே அதை வைத்து பலர் ரெசிப்பிகள் செய்து சாப்பிட்டு மகிழலாம். அந்த வகையில் நல்ல இனிப்பான மாங்காய் வைத்து இட்லி மற்றும் தோசைக்கு பொருந்தும் வகையில் ஒரு சட்னி செய்யலாம் வாங்க. இந்த சட்னி செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ!
இரண்டு நடுத்தரமான அளவில் உள்ள மாங்காய்களை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். சுத்தம் செய்த மாங்காவை அதன் தோள்களை நீக்கி பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கி வைத்திருக்கும் மாங்காய், ஒரு கப் தேங்காய் துருவல், ஒரு சிறிய துண்டு இஞ்சி, இரண்டு பல் வெள்ளை பூண்டு, இரண்டு கொத்து கருவேப்பிலை, காரத்திற்கு ஏற்ப காய்ந்த வத்தல் 2, பச்சை மிளகாய் இரண்டு, அரை தேக்கரண்டி உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு மற்றும் ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். இப்பொழுது தாளிசத்தின் அடுப்பை அணைத்துவிட்டு அதை சூட்டில் அரை தேக்கரண்டி பெருங்காயத்தூளை கடாயினுள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிராமத்து ஸ்டைல் ஆட்டுக்குடல் குழம்பு!
இந்த தாளிப்பை நம் மாங்காய் சட்னி செய்து வைத்திருக்கும் பாத்திரத்தில் சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும். இப்பொழுது சுவையான மாங்காய் சட்னி தயார். இந்த மாங்காய் சட்னியை இட்லி தோசை சூடான சாதம் என அனைத்துடன் வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாகவும் குழந்தைகளுக்கு பிடிக்கும் விதத்திலும் அமைந்திருக்கும். மேலும் இந்த மாங்காய் சட்னியை புளிப்பு அதிகமாக இருக்கும் மாங்காயை வைத்து செய்யாமல் சற்று இனிப்பு சுவையுடன் இருக்கும் மாங்காய் வைத்து செய்யும் பொழுது சட்னி சிறப்பாக அமையும்.