ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப் போகாத வீடே மணமணக்கும் வெந்தய குழம்பு ரெசிபி!

வெந்தயம் உடல் உஷ்ணத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய உணவு வகைகளில் ஒன்று. வயிற்றில் ஏற்படும் உபாதை, மாதவிடாய் பிரச்சனை, உடல் துர்நாற்றம், முடி உதிர்வு என பல பிரச்சனைகளுக்கு இந்த வெந்தயம் ஒரு சிறந்த மருந்தாக உள்ளது. இந்த வெந்தயம் வைத்து ஒரு சுவையான காரசாரமான குழம்பு செய்யலாம் வாங்க.

தேவையான பொருட்கள்.

அரிசி – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மிளகு – அரை தேக்கரண்டி
வெந்தயம் – 2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 50 மில்லி லிட்டர்
கடுகு – ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை – கைப்பிடி அளவு
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 2
குழம்பு மிளகாய்த்தூள் – 4 தேக்கரண்டி
புளி – எலுமிச்சை பழ அளவு
உப்பு மற்றும் தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு கடாயில் அரிசி, மிளகு, , சீரகம், வெந்தயம் சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த இந்த பொருட்களை சிறிது நேரம் ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும், கடுகு நன்கு வெடித்ததும் அதில் கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும். அதன்பின் நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை இதில் சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இரண்டு தக்காளிகளை மையாக அரைத்து இந்த கலவையில் சேர்த்துக் கொள்ளவும். தக்காளியும் வெங்காயமும் நன்கு வதங்கியதும் மூன்று தேக்கரண்டி குழம்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

வாயில் வைத்ததும் நெய் போல கரையும் செட்டிநாடு ஸ்பெஷல் ஸ்வீட் உக்காரை… ரெசிபி இதோ!

மிளகாய் தூளின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கினால் போதுமானது. இதை அடுத்து நாம் அரைத்து வைத்திருக்கும் வெந்தய பொடியை சேர்த்து வதக்க வேண்டும். அடுத்ததாக புளி கரைத்து இந்த கலவையினுள் சேர்க்க வேண்டும். இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த கலவையை நன்கு கலந்து கொடுத்து மிதமான தீயில் 15 முதல் 20 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். கடாயின் ஓரங்களில் எண்ணை பிரிந்து வந்தால் வெந்தய குழம்பு தயாராகிவிட்டது. இந்த வெந்தய குழம்பு சுடு சோற்றுடன் வைத்து சாப்பிடும் பொழுது மிக அருமையாக இருக்கும். மேலும் இந்த குழம்பை நான்கு, ஐந்து நாட்களுக்கு மேல் பதப்படுத்தியும் சாப்பிடலாம்.

Exit mobile version