ஈவினிங் டீ, காபிக்கு பதிலாக மும்பை ஸ்பெஷல் மசாலா தூத் குடிக்க வேண்டுமா? ரெசிபி இதோ…

மாலை நேரங்களில் வழக்கமான டீ, காபிக்கு பதிலாக சற்று வித்தியாசமான முறையில் சூடாக குடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்படும் நேரங்களில் இது போன்ற மசாலா தூத் செய்து குடித்து பாருங்கள். குழந்தைகளுக்கு விருப்பமாக மாறிவிடும் இந்த மசாலா தூத் மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் விதத்தில் சுவையில் அருமையாக இருக்கும். இந்த மும்பை ஸ்பெஷல் மசாலா தூத் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…

சுவையானதாக மட்டும் இல்லாமல் பல சத்துக்கள் தரக்கூடிய இந்த மசாலா தூத் செய்வதற்கு முதலில் ஒரு அகலமான கடாயில் ஒரு கைப்பிடி அளவு பாதாம், ஒரு கைப்பிடி அளவு முந்திரி, ஒரு பிஸ்தா சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வறுத்த இந்த பொருட்களை ஒரு அகலமான தட்டில் மாற்றி விடவும். மீண்டும் அதே கடாயில் ஒரு துண்டு சுக்கு, இரண்டு சிறிய துண்டு ஜாதிக்காய், 4 ஏலக்காய், அரை தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி காய்ந்த ரோஜா இதழ்கள் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

வறுத்த அனைத்து பொருட்களையும் நன்கு சூடு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், இரண்டு தேக்கரண்டி நாட்டு சக்கரை சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது மசாலா பால் செய்வதற்கு பொடி தயாராக உள்ளது. இந்த பொடியை காற்று செல்லாத ஒரு கண்ணாடி பௌலில் மாற்றி பிரிட்ஜில் வைத்தால் குறைந்தது ஆறு மாசம் வரை கெட்டுப் போகாது.

பாகற்காயா வேண்டாம் என ஓடுபவர்களுக்கு….. வாங்க பார்டர் பாவக்காய் ரெசிபி!

அடுத்ததாக அரை லிட்டர் பாலை காய்ச்ச வேண்டும். பால் நன்கு சூடாகி பொங்கி வரும் நேரத்தில் நாம் தயாரித்து வைத்திருக்கும் பொடியில் இரண்டு தேக்கரண்டி சேர்த்து கொதிக்க விட வேண்டும். மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் கொதித்தால் சுவையான மசாலா தூத் தயார். இதில் பொடியாக நறுக்கிய பிஸ்தா சிறிதளவு சேர்த்து பரிமாறினால் சுவை மேலும் அருமையாக இருக்கும்.

Exit mobile version