அரிசி, உளுந்து என எதையும் உறவுக்காமல் ஐந்தே நிமிடத்தில் பஞ்சு மாதிரியான தோசை!

வீட்டில் இட்லி மாவு காலியான சமயங்களில் தோசை சாப்பிட வேண்டும் என ஆசை ஏற்படுகிறதா? அப்போ இந்த ரெசிபி உங்களுக்கு தான். ஐந்தே நிமிடத்தில் பஞ்சு மாதிரி மிருதுவான தோசை செய்வதற்கான அருமையான ரெசிபி இதோ….

முதலில் இந்த மாவு தயாரிப்பதற்கு ஒரு கப் ரவையை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்ததாக அதனுடன் அரை கப் தயிர், அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.

இப்படி அரைத்த மாவுடன் அரை தேக்கரண்டி சோடா உப்பு, அரை தேக்கரண்டி சமையலுக்கு சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைத்துக் கொள்ளவும். அரைத்த இந்த மாவை ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.. மீண்டும் இதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து ஒரு ஐந்து நிமிடங்கள் வரை ஓரமாக வைத்து விடவும்.

அந்த நேரத்தில் ஒரு பெரிய வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், ஒரு கேரட், ஒரு சிறிய துண்டு முட்டைக்கோஸ் இவற்றை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளலாம். மேலும் கைப்பிடி அளவு கறிவேப்பிலை மற்றும் மல்லி இலைகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
5 நிமிடம் கழித்து நாம் ஊற வைத்திருக்கும் மாவில் நாம் பொடியாக நறுக்கிய இந்த காய்கறிகளை சேர்த்து கலந்து கொள்ளலாம். இதனுடன் தேவைப்பட்டால் மிளகு சீரகத்தூள் சேர்த்தால் சுவை மேலும் அருமையாக இருக்கும்.

ஜவ்வரிசியை வைத்து பாயாசம் மட்டுமல்ல பத்தே நிமிடத்தில் தித்திப்பான அல்வா செய்யலாம்!

இப்பொழுது மாவு தயாராக உள்ளது. தோசை கல்லை சூடாக்கி அதில் இந்த மாவை லேசாக வட்ட வடிவில் ஊற்றிக் கொள்ளவும். நல்லெண்ணெய் சேர்த்து இந்த தோசை செய்யும் பொழுது வாசனையாக இருக்கும். மேலும் தோசை சுவையாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டால் நெய் சேர்த்துக் கொள்ளலாம். இருபுறமும் நன்கு நெய் ஊற்றி பொன்னிறமாக வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

சுவையான பஞ்சு மாதிரி மிருதுவான ரவா தோசை தயார். மாவு இல்லாத நேரங்களில் ரவா வைத்து இதுபோன்று தோசை செய்து கொடுத்து வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம் வாங்க.

Exit mobile version