ஒருமுறை மேகியை இப்படி முட்டை சேர்த்து செய்து பாருங்கள்.. சூப்பரான எக் மேகி…!

மேகி பலருக்கும் பிடித்தமான ஒரு உணவு என்று சொல்லலாம். செய்வதற்கு சுலபமாக இருப்பதாலும் சுவையாக இருப்பதாலும் பலரும் இந்த மேகியை வாங்கி சுவைத்து மகிழ்வார்கள். குறிப்பாக புதிதாக சமையல் கற்றுக் கொள்பவர்களுக்கும், பேச்சுலர்களுக்கும் பல நேரங்களில் கைகொடுக்கும் ஒரு ரெசிபியாக இந்த மேகி இருக்கிறது. இந்த மேகியை வைத்து நாம் வழக்கமாக செய்வது போன்று இல்லாமல் இப்படி முட்டை சேர்த்து செய்து பார்த்தால் இதன் சுவை இன்னும் நன்றாக இருக்கும். வாருங்கள் முட்டையை சேர்த்து எப்படி அட்டகாசமான எக் மேகி செய்வது என்பதை பார்க்கலாம்.

எக் மேகி செய்வதற்கு முதலில் ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் இதில் நீளவாக்கில் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை சேர்க்கவும். இந்த பெரிய வெங்காயத்தை நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கும் பொழுதே முட்டைக்கு தேவையான மசாலாக்களை சேர்க்கலாம். கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் மல்லித்தூள், கால் டீஸ்பூன் சீரகத்தூள், கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். மசாலாக்கள் பச்சை வாசனை போகும் வரை இதனை நன்றாக வதக்க வேண்டும்.

ரெஸ்டாரன்ட் சுவையிலேயே அட்டகாசமான எக் ப்ரைட் ரைஸ் இப்படி செய்து பாருங்கள்…!

மசாலாக்களை நன்கு வதக்கிய பிறகு ஒரு பெரிய தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி அதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிது நேரம் வதக்கி விட வேண்டும். வெங்காயம் மற்றும் தக்காளி நன்கு வதங்கியதும் இரண்டு முட்டையை உடைத்து இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது முட்டையை வேகும் வரை கிளறி விட வேண்டும். முட்டை வெந்து வந்ததும் இதனை தனியாக வைத்து விடலாம்.

பிறகு அதே கடாயில் இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். தண்ணீரை நன்றாக கொதிக்க விட வேண்டும் தண்ணீர் கொதித்ததும் இரண்டு பாக்கெட் மேகியை அதனுடன் சேர்த்துக் கொள்ளவும். பிறகு மேகி டேஸ்ட் மேக்கரை சேர்க்கவும். மிதமான தீயில் வைத்து வெந்து வரும் வரை கிளறி விட வேண்டும்.

உணவகங்களில் கிடைக்கும் சுவையிலேயே எக் நூடுல்ஸ் இப்படி செய்து பாருங்கள்…!

மேகி வெந்ததும் நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் முட்டையை சேர்க்கவும். கால் டீஸ்பூன் அளவு பெப்பர் பவுடரை சேர்த்து கொள்ளவும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கிவிடலாம்.அவ்வளவுதான் அட்டகாசமான எக் மேகி தயார்…!

Exit mobile version