என்னதான் விதவிதமாய் உணவு பண்டங்கள் வைத்து வித விதமாய் சமைத்து விருந்து சாப்பிட்டாலும் இறுதியில் ரசம் கொஞ்சமாய் ஊற்றி சாப்பிட்டால் தான் அந்த விருந்தே முழுமை அடைந்தது போல் திருப்தி இருக்கும். பலருக்கும் ரசம் அந்த அளவுக்கு பிடித்தமான ஒன்று. ரசத்தை பல வகையாக நாம் வைக்கலாம். இப்பொழுது ரசத்தை வழக்கம்போல் இல்லாமல் எலுமிச்சை ரசமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
அருமை…! மூட்டு வலி பிரச்சனைகளை முற்றிலும் நீக்கும் முடக்கத்தான் கீரை ரசம்!
இதற்கு இரண்டு கப் அளவிற்கு பருப்பு வேகவைத்த தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பருப்பு வேக வைத்த தண்ணீரில் ஒரு தக்காளி பழத்தை நறுக்கி சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கரைசலில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். ஒரு உரலில் ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், 3 பல் பூண்டு ஆகியவற்றை இடித்து ஓரளவு தட்டியதும் பருப்பு தண்ணீர் கரைசலில் சேர்க்கவும்.
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் காய வைத்து எண்ணெய் காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, அரை ஸ்பூன் வெந்தயம், சிறிதளவு பெருங்காயத்தூள், ஒரு வர மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
இவற்றை தாளித்ததும் ஏற்கனவே கரைத்து வைத்திருக்கும் ரசத்தை இதில் ஊற்றி கொதிக்க விடவும். நுரை கூடி வரும்பொழுது இறக்கி விடலாம். இறக்கிய பின்பு எலுமிச்சை பழம் ஒன்றை பிழிந்து வடிகட்டி இந்த ரசத்தில் ஊற்றி கலக்கி விட வேண்டும். இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம்.
அட.. என்ன சுவை! தேநீருக்கு மாற்றாக மாலை நேரத்தில் இந்த தக்காளி சூப் குடித்து பாருங்கள்!
அவ்வளவுதான் சுவையான எலுமிச்சை ரசம் தயார்!