வாவ்…! சூப்பரான சிக்கன் கட்லெட்…. சிக்கன் எடுத்தால் இந்த சிக்கன் கட்லெட் ஒரு முறை செய்து பாருங்கள்…!

சிக்கனை வைத்து சுவையான பல்வேறு ரெசிபிகளை நாம் செய்ய முடியும். சிக்கன் வைத்து செய்யும் ரெசிபிக்கள் சுவை நிறைந்ததாகவும் அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியதாகவும் இருக்கும். அப்படி சிக்கனை வைத்து செய்யக்கூடிய அனைவருக்கும் பிடித்தமான ஒரு ரெசிபி சிக்கன் கட்லெட். இந்த சிக்கன் கட்லட் செய்வது மிக சுலபம். அதே சமயம் சுவையும் அட்டகாசமாக இருக்கும். வாருங்கள் இந்த சிக்கன் கட்லெட் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

வாவ்…! மாலை நேர காபி அல்லது டீயுடன் சூடாக சாப்பிட சூப்பரான ஸ்னாக்ஸ்.. பன்னீர் கட்லட்!

சிக்கன் கட்லட் செய்வதற்கு முதலில் அரை கிலோ அளவு சிக்கனை எடுத்துக் கொள்ள வேண்டும். எலும்பு இல்லாத சிக்கனாக தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். இந்த சிக்கனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு உருளைக்கிழங்குகளை வேகவைத்து தோல் உரித்து அதனை மசித்து தனியாக வைத்து விடவும். இப்பொழுது ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் இதனுடன் 250 கிராம் அளவு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். இப்பொழுது கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் கரம் மசாலா, இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

இவை நன்கு வதங்கிய பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். சிக்கனுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும். சிக்கன் நன்கு வேகும் வரை இதனை வதக்கவும். இறுதியாக கொஞ்சம் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் ஏற்கனவே வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி கொள்ள வேண்டும். இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி கிளறி இறக்கி விடலாம். இப்பொழுது மற்றொரு கிண்ணத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றிக் கொள்ள வேண்டும். ஒரு கப் அளவு பிரட் கிரம்சை தனியாக வைத்துக் கொள்ளவும்.

நாம் தயார் செய்து வைத்திருக்கும் சிக்கனை எடுத்து உருண்டையாக உருட்டி அதை தட்டை வடிவில் தடிமனாக தட்டிக் கொள்ள வேண்டும். தட்டி வைத்திருக்கும் சிக்கனை முட்டையில் தோய்த்து ப்ரெட் க்ராம்ஸில் நன்கு புரட்டிக் கொள்ளவும். எல்லா பக்கங்களிலும் பிரட் கிரம்ஸ் படும்படி புரட்டிக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் நாம் தயார் செய்து வைத்திருக்கும் கட்லெட்டை ஒவ்வொன்றாக பொறித்து எடுத்துக் கொள்ளவும். இருபுறமும் நன்கு சிவந்து வெந்தவுடன் எடுத்துவிடலாம். அவ்வளவுதான் சுவையான கட்லட் சுட சுட தயாராகி விட்டது.

Exit mobile version