கல்யாண வீட்டு முட்டைக்கோஸ் பொரியல்… அதே சுவையில் வீட்டில் செய்வது எப்படி?

கல்யாண வீடுகளில் தவறாமல் இடம்பெறும் உணவு வகைகளில் முட்டைக்கோஸ் பொரியலும் ஒன்று. முட்டைக்கோஸ் பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட கல்யாண வீடுகளில் பரிமாறும் இந்த முட்டைக்கோஸ் பொரியலை விரும்பி சாப்பிடுவார்கள். காரணம் அதில் பரிமாறப்படும் இந்த முட்டைக்கோஸ் பொரியல் நல்ல சுவையாக இருப்பது தான். இப்பொழுது நாமும் அதே சுவையில் முட்டைகோஸ் பொரியலை எப்படி நம் வீட்டில் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு பொரியல்.. அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு பொரியலை இனி இப்படி செய்யுங்க!

இந்த முட்டைக்கோஸ் பொரியல் செய்வதற்கு முதலில் இரண்டு மேஜை கரண்டி அளவு பாசிப்பருப்பை தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். இது குறைந்தது அரை மணி நேரம் ஊற வேண்டும். ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு முட்டைக்கோஸ் ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். இரண்டு மேஜை கரண்டி வரும் அளவிற்கு தேங்காயை துருவி தேங்காய்ப்பூ எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது ஒரு கடாயில் மூன்று மேஜை கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இவற்றை தாளித்த பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். ஏற்கனவே ஊற வைத்திருக்கும் பாசிப்பருப்பை தண்ணீரை வடித்து இதில் சேர்த்து வதக்கவும்.

இப்பொழுது பொடியாக நறுக்கிய முட்டைக்கோசை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். முட்டைக்கோஸ் தண்ணீர் விடும் எனவே இதில் தண்ணீர் எதுவும் சேர்க்கத் தேவையில்லை. ஒரு வேலை முட்டைக்கோஸ் வதக்கும் பொழுது மிகவும் வறண்டு இருப்பது போல் தோன்றினால் சிறிது தண்ணீரை தெளித்துக் கொள்ளலாம். இதனை மூடி போட்டு 5 முதல் 8 நிமிடங்கள் வரை வேக விடவும். முட்டைக்கோஸ் நன்கு வெந்ததும் இதில் தேங்காய் பூ தூவி ஒரு கிளறு கிளறி இறக்கி விடலாம்.

கல்யாண வீட்டு ரவை கேசரி! சுவை மாறாமல் அதே சுவையில் செய்வது எப்படி?

அவ்வளவுதான் சுவையான முட்டைக்கோஸ் பொரியல் கல்யாண வீட்டு சுவையில் தயாராகி விட்டது!

Exit mobile version