அட்டகாசமான சுவையில் பாதாம் அல்வா… இப்படி செய்து பாருங்கள்!!!

பாதாம் அல்வா திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளின் பொழுது பரிமாறப்படக்கூடிய ஒரு இனிப்பு வகையாகும். பாதாம் சத்துக்கள் நிறைந்த ஒரு நட்ஸ் வகையாகும். இந்த பாதாமை கொண்டு பாதாம் பால், பாதாம் பர்பி மற்றும் பாதாம் அல்வா என பல வகையான இனிப்புகளை நாம் செய்யலாம்.

ஹோட்டல் மற்றும் கல்யாண வீடுகளில் கிடைக்கும் சுவையில் சூப்பரான பிரட் அல்வா!

இந்த பாதாம் அல்வாவை பெரும்பாலும் வீட்டில் செய்வதற்கு தயங்குவார்கள் காரணம் இதை செய்வது கடினம் என்று நினைப்பார்கள். ஆனால் உண்மையிலேயே பாதாம் அல்வா செய்வது எளிமையானது மிகக் குறைவான பொருட்களைக் கொண்டு 30 நிமிடத்திற்குள் இந்த பாதாம் அல்வாவை செய்துவிடலாம்.

பாதாம் அல்வா செய்வதற்கு 200 கிராம் பாதாம் பருப்பை வெந்நீரில் ஊற வைக்க வேண்டும். 100 கிராம் முந்திரிப் பருப்பை சாதாரண தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இவை இரண்டும் நன்றாக ஊறியதும் பாதாம் பருப்பினை தோல் உரித்து மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு காய்ச்சிய பால் சேர்த்து அரைக்க வேண்டும்.

பாதாம் ஓரளவு அரைப்பட்டதும் ஊற வைத்திருக்கும் முந்திரியையும் இதனுடன் சேர்த்து கொஞ்சமாக பால் விட்டு மைபோல அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அடி கனமாக இருக்கக்கூடிய ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதுகளை சேர்க்க வேண்டும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து 500 கிராம் சீனி சேர்த்துக் கொள்ள வேண்டும். சீனி சேர்த்த பின்பு மஞ்சள் நிற புட் கலர், ஜாதிக்காய் தூள் மற்றும் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து கிளற வேண்டும்.

அடுப்பை குறைவான தீயில் வைத்து கைவிடாமல் கிளற வேண்டும். அடிப்பிடிக்காமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும். 500 கிராம் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும். அல்வா இறுகி வரும் பொழுது மீண்டும் நெய் சேர்ப்பதை நிறுத்தி அடுப்பை அணைத்து அல்வாவை இறக்கி விடலாம்.

இப்பொழுது இந்த பாதாம் அல்வாவை வேறு பாத்திரத்தில் மாற்றி வைத்துவிட்டு ஆற விடவும். ஆறிய பின்பு பட்டர் பேப்பரில் மடித்து வைத்து பரிமாறலாம். இதில் முந்திரிப் பருப்பிற்கு பதிலாக முழுவதுமாக பாதாம் பருப்பு மட்டுமே சேர்த்தும் செய்யலாம். முந்திரிப் பருப்பு சேர்ப்பதால் அளவு சற்று கூடுதலாக கிடைக்கும்.

என்ன சுரைக்காயை வைத்து இவ்வளவு சூப்பரான அல்வாவா??? சுண்டி இழுக்கும் சுரைக்காய் அல்வா!!!

அவ்வளவுதான் சுவையான பாதாம் அல்வா தயார்!

Exit mobile version