பனை மரத்தின் நுங்கு வைத்து ஜூஸ் அல்லது சர்பத் சாப்பிட்டு இருப்போம்… பாயா செய்து சாப்பிட்டதுண்டா? நுங்கு பாயா செய்வதற்கான ரெசிபி இதோ….

பனை மரத்திலிருந்து கிடைக்கும் நுங்கு உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. சீசன் காலங்களில் மட்டுமே கிடைக்கும் இந்த நுங்கு விலையில் மலிவாகவும் எளிதில் கிடைக்கக்கூடிய பொருளாகவும் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இந்த நுங்கு உடலுக்கு குளிர்ச்சி அளித்து பலவிதமான நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது. நுங்கு வாங்கியவுடன் அப்படியே கழுவி சுத்தம் செய்து அதன் தோள்களை நீக்கி உடனே சாப்பிட்டு விடலாம். ஆனால் சிலர் அது வைத்து ஜூஸ் அல்லது சர்பத்து செய்து சுவையை அதிகரித்து சாப்பிடுவதும் வழக்கமாக வைத்துள்ளனர். இப்பொழுது புதுவிதமாக நுங்கு வைத்து அருமையான பாயா செய்து சாப்பிடலாம்…நுங்கு பாயா செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ….

இந்த பாயா செய்வதற்கு மூன்று முதல் ஐந்து நுங்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் தோள்களை நீக்கி சுத்தம் செய்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு சூடானதும் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து அடுப்பை அணைத்து வைக்க வேண்டும்.

அந்த வெந்நீரில் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் நுங்கை சேர்த்து ஒரு நிமிடம் விட்டுவிட வேண்டும். ஒரு நிமிடம் கழித்து அதை தனியாக மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி வைத்து விடலாம். இப்பொழுது அந்த நுங்கில் முள் கரண்டியை பயன்படுத்தி சிறு சிறு துளைகளை போட்டு வைத்து விடலாம்.

அடுத்ததாக மற்றொரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பிரியாணி இலை ஒன்று, பட்டை இரண்டு, ஏலக்காய் 2, கிராம்பு 2, பெருஞ்சீரகம் அரை தேக்கரண்டி சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் வதங்கும் நேரத்தில் இரண்டு பச்சை மிளகாய், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இஞ்சி பூண்டு விழுதுவின் பச்சை வாசனை செல்லும் வரை மிதமான தீயில் வதக்க வேண்டும்.

அந்த நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரின் அரை கப் தேங்காய் துருவல், 5 முந்திரி பருப்பு, ஒரு தேக்கரண்டி கசகசா, இரண்டு பட்டை, இரண்டு ஏலக்காய், அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம், கிராம்பு இரண்டு சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.

உளுந்து வைத்து எப்பொழுதும் இட்லி, உளுந்தங்களி, உளுந்தங்கஞ்சி மட்டும்தான் செய்ய முடியுமா? வாங்க அருமையான புசுபுசு பூரி செய்யலாம்…

இந்த கலவையை வெங்காயம் வதங்கியதும் கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது ஒரு கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் பாயாவை கொதிக்க விட வேண்டும். ஒரு 5 நிமிடம் கழித்து நாம் தயார் செய்து வைத்திருக்கும் நுங்கை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது பாயாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளலாம்.

இறுதியாக கைப்பிடி அளவு புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை தூவி ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி விடலாம். இதில் பாதி அளவு எலுமிச்சை பல சாறு பிழிந்து கலந்து கொண்டால் சுவையான நுங்கு பாயா தயார். இந்த பாயாவை இடியாப்பம் தோசைக்கு வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.

Exit mobile version