வீட்டில் பெரும்பாலும் காய்கறிகள் இல்லாத நேரங்களில் என்ன குழம்பு வைப்பது என்பது பலரின் கேள்வியாக இருக்கும். அந்த நேரத்தில் கலவை சாதங்கள் அதாவது தயிர் சாதம், லெமன் சாதம் போன்ற கலவை சாதங்கள் செய்வது பலருக்கு எளிதான ஒன்றாக இருக்கும். ஆனால் அந்த நேரத்திலும் குழம்பு வைத்து சாப்பிட வேண்டும் என்பது சிலரின் ஆசையாக இருக்கும். ஒரு வெங்காயம் வைத்து அசத்தலான குழம்பு செய்யலாம் வாங்க. இந்த குழம்பு சாதத்திற்கு மட்டுமில்லாமல் காலை இட்லி மற்றும் தோசைக்கும், இரவு நேரத்தில் சப்பாத்திக்கும் வைத்த சாப்பிட சிறந்த பொருத்தமாக இருக்கும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் ஒன்றரை கப் கடலை மாவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரைத்து கரண்டி மிளகாய்த்தூள், அரை தேக்கரண்டி சீரகம், கால் தேக்கரண்டி பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு, அரை தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, ஒரு கப் தயிர், கைப்பிடி அளவு கஸ்தூரி மேத்தி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
இந்த மாவை ஒருசேர கலந்து பிசையும் பொழுது தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. தேவைப்பட்டால் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளலாம். மாவு குறிப்பாக சப்பாத்தி மாவு பதத்திற்கு வர வேண்டும்.
இப்பொழுது திரட்டி வைத்திருக்கும் மாவை நீளமாக உருண்டைகளாக உருட்டிக் கொண்டு நமக்கு வேண்டிய வடிவில் நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த துண்டுகளை நல்ல கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து ஐந்து முதல் பத்து நிமிடத்தில் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நன்கு வெந்திருக்கும் இந்த மாவு உருண்டைகள் பெரியதாக இருக்கும் பட்சத்தில் சிறு சிறு துண்டுகளாகவும் நறுக்கிக் கொள்ளலாம்.
அதை போல் கடலை மாவு உருண்டைகளை வேகவைத்த தண்ணீரையும் சமையலுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்ததாக ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி சீரகம், 2 கொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்ததாக ஒரே ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்கியதும் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்ததாக ஒரு தேக்கரண்டி கரம் மசாலா, ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒன்றரை தேக்கரண்டி தனியா தூள் சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு சத்தான ஈவினிங் ஸ்நாக்ஸ் கொடுக்க வேண்டுமா? கேழ்வரகு மாவு கார கொழுக்கட்டை… ரெசிபி இதோ..
மசாலாக்களின் பச்சை வாசனை சென்றவுடன் கடலை மாவு உருண்டைகள் வேகவைத்த தண்ணீரை கடாயில் சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
குழம்பு நன்கு கொதி வந்ததும் நாம் துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் கடலை மாவு உருண்டைகளை இதில் சேர்த்து மிதமான தீயில் பத்து நிமிடம் கொதிக்க விட வேண்டும். கடாயில் ஓரங்களில் எண்ணை பிரிந்து வந்தால் இப்பொழுது குழம்பு தயாராக மாறி உள்ளது.
இறுதியாக கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான கடலை மாவு உருண்டை குழம்பு தயார்.