வீடு மணக்கும் காரைக்குடி ஸ்பெஷல் செட்டிநாடு கருப்பட்டி பணியாரம்! சொல்லும் போதே நாவில் எச்சில் ஊறும் ரெசிபி…

வீடுகளில் மாலை நேரங்களில் பலகாரம் சாப்பிட தோன்றும் பொழுது கடைக்கு செல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சில நிமிடங்களில் சுவையான பலகாரங்கள் செய்வது வழக்கம். அதில் ஒன்றுதான் பணியாரம். அதிலும் கருப்பட்டி சேர்த்து செய்யும் பொழுது அதன் சுவைக்கு வீட்டில் உள்ள அனைவரும் அடிமையாகி விடுவார்கள். அந்த வகையில் காரைக்குடி ஸ்பெஷல் செட்டிநாடு கருப்பட்டி பணியாரம் நம் வீட்டில் செய்து மகிழ எளிமையான ரெசிபி இதோ..

முதலில் ஒரு கப் பச்சரிசியை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து கூற வைக்க வேண்டும். இந்த பணியாரம் செய்வதற்கு நாம் மாவு பச்சரிசியை பயன்படுத்தினால் சுவை அருமையாக இருக்கும்.

மூன்று மணி நேரம் கழித்து ஊற வைத்திருக்கும் பச்சரிசியில் தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு வெள்ளைத் துணியில் பச்சரிசியை நன்கு பரப்பி மிதமான காய்ச்சல் உலர வைக்க வேண்டும். குறைந்தது அரை மணி நேரம் பச்சரிசியை காய வைக்க வேண்டும்.

அரை மணி நேரம் கழித்து பச்சரிசியை தொட்டு பார்க்கும் பொழுது ஒன்று இரண்டு அரிசிகள் மட்டும் கையில் ஒட்ட வேண்டும். பாதி ஈரத்துடன் இருக்கும் இந்த பச்சரிசியை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளலாம். நன்கு மையாக பச்சரிசியை அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு கப் கருப்பட்டிக்கு கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். ஐந்து நிமிடம் கருப்பட்டி கொதித்தான் போதுமானது. இந்த நேரத்தில் நாம் அரைத்து வைத்திருக்கும் பச்சரிசி மாவில் நன்கு பழுத்த ஒரு வாழைப்பழத்தை சேர்த்துக் கொள்ளலாம். அதனுடன் அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள், அரை தேக்கரண்டி சுக்குத்தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

மீந்து போன சாதம் வைத்து இவ்வளவு செய்ய முடியுமா? அசத்தலான ரெசிபிகள் இதோ!

இறுதியாக கால் கப் கருப்பட்டி பாகு கெட்டியாக சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையை நன்கு கலந்து குறைந்தது 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். 8 மணி நேரம் கழித்து மீதம் இருக்கும் கருப்பட்டி பாகையும் மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளலாம். இப்பொழுது பணியார மாவு தயார்.

பணியார கல்லை அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடுபடுத்த வேண்டும். இந்த பணியாரம் செய்வதற்கு நெய் அல்லது நல்லெண்ணெய் பயன்படுத்தினால் சுவை அருமையாக இருக்கும். பணியார குழியில் பாதி அளவிற்கு மாவு சேர்த்து நெய் ஊற்றி முன்னும் பின்னும் பொன்னிறமாக வரும் வரை வேகவைத்து எடுத்தால் சுவையான கருப்பட்டி பணியாரம் தயார்.

Exit mobile version