பூ வைத்து அல்வா செய்ய முடியுமா? ஆமாங்க முருங்கை பூ வைத்து அருமையான அல்வா செய்யலாம். அதற்கான அசத்தல் ரெசிபி இதோ….

நம் வீடுகளில் எளிமையாக வளர்க்கக்கூடிய மரங்களில் ஒன்று முருங்கை மரம். இதில் இருந்து நமக்கு முருங்கை கீரை, முருங்கை காய் என பல விதமானதமான உணவுப் பொருட்கள் கிடைக்கிறது. மேலும் உடலுக்கு சத்து தரக்கூடிய முருங்கைப்பூ அதிகமாக இருக்கும் நேரங்களில் அதை வைத்து என்ன செய்வது என தெரியாமல் குழப்பமா? சிலர் இந்த முருங்கை பூ வைத்து பொரியல், , ரசம் என செய்வது வழக்கம். இப்பொழுது சற்று வித்தியாசமாக குழந்தைகளுக்கு பிடிக்கும் விதத்தில் முருங்கைப்பூ வைத்து சுவையான அல்வா செய்யலாம் வாங்க.. இந்த முருங்கைப்பூ அல்வா செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…

இரண்டு கைப்பிடி அளவு முருங்கைப்பூ எடுத்து கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு மையாக அரைத்து பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

மூன்று கப் அளவு முருங்கை பூ சாறுக்கு முக்கால் கப் அளவு கான்பிளவர் மாவு எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் நம் கலந்து வைத்திருக்கும் கலவையை அதில் சேர்த்து கைவிடாமல் கிளற வேண்டும். இந்த கலவையில் ஒரு கப் அளவு வெல்லம் சேர்த்து மீண்டும் கலந்து கொடுக்க வேண்டும். இனிப்பின் சுவை சற்று கூடுதலாக தேவைப்பட்டால் மேலும் இரண்டு தேக்கரண்டி வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.

பாட்டியின் கைப்பக்குவத்தில் ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப் போகாத வறுத்து அரைத்த பூண்டு குழம்பு!

இந்த கலவை கெட்டியாக இறுதி வரும் நேரத்தில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து மீண்டும் கிளறி கொடுக்க வேண்டும். இந்த மாவு அல்வா பதம் வரும் வரை தொடர்ந்து கிளற வேண்டும். 15 முதல் 20 நிமிடம் கழித்து அல்வா பதத்திற்கு நன்கு கெட்டியாக மாறிவிடும்.

இப்பொழுது இறுதியாக இரண்டு தேக்கரண்டி நெய் , நெய் நெய் நெய்யில் வறுத்தத்து முந்திரி மற்றும் திராட்சை , அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான முருங்கைப்பூ அல்வா தயார்.

Exit mobile version