கோவக்காய் பிடிக்காது என சொல்பவர்களும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையான கோவக்காய் பொரியல்!

கோவக்காயில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதன் கசப்பு சுவையின் காரணமாக பெரும்பாலானோர் இதை விரும்புவதில்லை. வீடுகளில் செய்தால் கூட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வேண்டாம் என ஒதுக்கி வைப்பது வழக்கம். ஆனால் கோவக்காய் வைத்து ஒருமுறை இது போன்ற பொரியல் செய்து பாருங்கள். சாப்பிடாதவர்கள் கூட வேண்டும் என விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவை அருமையாக இருக்கும். கசப்பு சுவையே தெரியாத அளவிற்கு கோவக்காய் பொரியல் செய்வதற்கான ரெசிபி இதோ….

இந்த பொரியல் செய்வதற்கு தேவையான மசாலாவை முதலில் தயார் செய்து கொள்ளலாம்.. அதற்கு ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி மல்லி, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி கடலை பருப்பு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு சேர்த்து வாசனை வரும் வரை பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
அடுத்ததாக இதில் காரத்திற்கு ஏற்ப இரண்டு காய்ந்த வத்தல், 5 பல் வெள்ளை பூண்டு, , ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை, ஒரு தேக்கரண்டி வெள்ளை எள் சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும்.

வறுத்த இந்த பொருட்களின் சூடு தனித்ததும் மிக்ஸி ஜாருக்கு மாற்றி நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

கடுகு நன்கு பொரிந்ததும் கொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும், வெங்காயம் வதக்கும் நேரத்தில் கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளலாம்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நாம் நறுக்கி வைத்திருக்கும் கோவக்காயை கடாயில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அடுத்ததாக அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுத்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும். மிதமான தீயில் இந்த கலவையை 10 நிமிடம் கலந்து கொடுத்து வேக வைக்க வேண்டும்.

பிரபல சமையல் கலைஞர் தாமு அவர்களின் கைப்பக்குவத்தின் செட்டிநாடு சிக்கன் மசாலா சாப்பிட வேண்டுமா? ரெசிபி இதோ…

பத்து நிமிடங்கள் கழித்து நாம் தயார் செய்து வைத்திருக்கும் மசாலா கலவையை கடாயில் சேர்த்து மீண்டும் கலந்து கொடுக்க வேண்டும். இப்பொழுது மீண்டும் ஒருமுறை ஒரு நிமிடம் கோவக்காயை கிளறி மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.

இப்பொழுது சுவையான கோவக்காய் பொரியல் தயார். இறுதியாக பொடியாக நறுக்கிய மல்லி இலைகள் தூவி கலந்து கொடுத்து பரிமாறினாள் சுவை சிறப்பாக இருக்கும். சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு இந்த கோவக்காய் பொரியல் வைத்து சாப்பிடும் பொழுது அருமையாக இருக்கும்.

Exit mobile version