வட இந்திய உணவு முறைகளில் மிகவும் பிரபலம் அடைந்த ஒன்றுதான் பன்னீர் மசாலா. அதிலும் தாவா ஸ்டைல் பன்னீர் மசாலா என்பது அதிகப்படியான எண்ணெய், காரம், சிறப்பு வகை மசாலாக்களுடன் தயாரிக்கப்படுகிறது. ஒருமுறை சுவைத்தாலே அதன் சுவை நாக்கை விட்டு நகலாமல் அப்படியே நடனம் ஆடும். இப்படிப்பட்ட ஸ்பைசியான தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…..
முதலில் ஒரு கப் பன்னீரை சதுர சதுர வடிவமாக வெட்டி ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும். அதில் அரை தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி மிளகுத் தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் , அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து ஊற வைக்க வேண்டும். மசாலா கலந்த இந்த பன்னீரை குறைந்தது 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
அதன் பின் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் ஊறவைத்த பன்னீரை சேர்த்து பொன்னிறமாக இருபுறமும் வரும் வரை குறித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பன்னீரை அதிக நேரம் பொறித்தெடுக்க கூடாது அப்படி செய்தால் பன்னர் சற்று கடினமாக மாறிவிடும். அதனால் பன்னீரை பொறித்தத்தெடுக்கும் பொழுது சற்று கவனத்துடன் பொரித்தெடுக்க வேண்டும்.
அடுத்ததாக ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம், பிரியாணி இலை, கல்பாசி, நட்சத்திர பூ சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அதன் பின் நன்கு பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒன்றரை தேக்கரண்டி மல்லித்தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் இரண்டு தக்காளிகளை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்து அந்த விழுதுகளை கடாயில் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி குறைந்தது இரண்டு முதல் மூன்று நிமிடம் இதமான கையில் வதக்க வேண்டும்.
ஹைதராபாத்தில் மிக பிரபலமான அப்பல்லோ சிக்கன்!
தக்காளி வதங்கியதும் அரை கப் கெட்டி தயிர் சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும். மிதமான தீயில் இந்த கலவையை ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். குழம்பு நன்கு கொதித்து கெட்டித்தன்மை வந்ததும் நாம் பொரித்து வைத்திருக்கும் பன்னீரே இதில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
இறுதியாக வாசனைக்கு கைப்பிடி அளவு கஸ்தூரி மேத்தியே சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா தயார்.