கெட்டியான தயிர் செய்ய உறைமோர் இல்லையா?? கவலை வேண்டாம் உறைமோர் இல்லாமல் தயிர் செய்ய அருமையான ஐடியாக்கள்!

தயிர் தினமும் உணவில் ஒரு குறிப்பிட்ட அளவு அனைவரும் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு உணவுப் பொருளாகும். தயிரில் நம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் இந்த தயிர் அவசியம். தினமும் என்னதான் உணவு சாப்பிட்டாலும் இறுதியில் தயிர் போட்டு சாப்பிட்டால் தான் உணவே முழுமை அடைந்த திருப்தி இருக்கும். இந்த தயிரை பலரும் கடைகளில் வாங்கி பயன்படுத்தினாலும் கடைகளில் வாங்குவதை விட வீட்டிலேயே செய்தால் கெட்டியான ஆரோக்கியமான தயிரை செய்ய முடியும்.

இட்லி சாஃப்டாக வரவில்லையா? பஞ்சு போன்ற மென்மையான இட்லிக்கு இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!

இந்த தயிர் செய்வதற்கு பெரும்பாலும் பாலை நன்கு காய்ச்சி அதனை அறை வெப்பநிலை வரும் வரை ஆற வைத்து விடுவர். வெப்பநிலை மாறியதும் ஒரு குறிப்பிட்ட அளவு உரைமோரை அதில் ஊற்றி கலந்து வைத்து விடுவர். மறுநாள் பால் புளித்து தயிராக மாறி இருக்கும். ஆனால் வீட்டில் உறை மோர் இல்லை என்றால் தயிர் எப்படி செய்வது? என்ற குழப்பம் பலருக்கும் இருக்கலாம். இனி குழம்ப வேண்டாம். உறைமோர் இல்லாவிட்டாலும் நாம் கெட்டியான தயிரை வீட்டிலேயே செய்ய முடியும் இதற்கு சில டிப்ஸ்களை பார்ப்போம்.

1.எலுமிச்சை சாறு:

பாலை நன்கு காய்ச்சி வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் பொழுது இதில் ஒரு ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். சாறு சேர்த்து நன்கு கலந்து அப்படியே மூடி வைத்து விடவும். 12 மணி நேரம் கழித்து பார்த்தால் பால் தயிராக மாறி இருப்பதை பார்க்கலாம்.

2. வெள்ளி:

வெள்ளிக்கு பாலை தயிராக மாற்றக்கூடிய ஆற்றல் உண்டு என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம்! உங்களிடம் உள்ள வெள்ளி மோதிரத்தையோ அல்லது வெள்ளி நாணயத்தையோ நன்கு சுத்தம் செய்து ஒரு கிண்ணத்தில் பாலை எடுத்து அதில் போட்டு அப்படியே மூடி வைத்து விடவும். ஒரு நாள் இரவு முழுவதும் வைத்துவிட்டு மறுநாள் பார்க்க தயிர் உருவாகி இருக்கும் ‌‌.

3. பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய்:

மிளகாயும் இதே போல தான் பாலை நன்கு காய்ச்சிய பிறகு அதனை வெதுவெதுப்பாகும் வரை ஆறவிடவும். வெதுவெதுப்பானதும் மூன்று மிளகாய்களை காம்புடன் போட்டு மூடி வைத்து விடவும். 12 மணி நேரத்தில் நமக்கு கெட்டித் தயிர் கிடைத்திருக்கும்.

பாத்திரம் அடி பிடித்து விட்டதா கவலை வேண்டாம்! இந்த டிப்ஸை பின்பற்றி எளிதாக கறையை நீக்குங்க!

எப்பொழுதும் தயிருக்கு பாலை காய்ச்சும் பொழுது அதிகமான தண்ணீர் சேர்க்காமல் நன்கு கெட்டியாகும் வரை காய்ச்சவும். இதற்கு அதிக கொழுப்பு உள்ள பாலை பயன்படுத்தினால் நமக்கு நல்ல கெட்டித்தயிர் கிடைக்கும். இன்னும் ஏன் காத்திருக்கிறீர்கள்? இந்த டிப்ஸை பயன்படுத்தி அருமையான கெட்டித் தயிரை உருவாக்குங்கள்.

Exit mobile version