காய்கறிகளை முதல் நாள் இரவே நறுக்கி மறுநாள் சமையலுக்கு பயன்படுத்துகிறீர்களா? அப்போ இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!

காலை நேரம் என்பது பெரும்பாலும் அனைத்து குடும்பத்திலும் பரபரப்பான ஒரு நேரம் ஆகும். குறிப்பாக பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்பவர்களுக்கு காலை நேரத்தில்தான் காலை உணவு, மதிய உணவு என அனைத்தையும் தயார் செய்ய வேண்டும். இல்லத்தரசிகளானாலும் சரி வேலைக்குச் செல்லும் பெண்களானாலும் சரி இந்த நேரத்தில் அதிக வேலைப்பளு இருக்கத்தான் செய்யும். எனவே நேர மேலாண்மையை கருதி சிலர் முதல் நாள் இரவே காய்கறிகளை நறுக்கி குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுவர். காய்கறிகளை நறுக்கி குளிர்சாதன பெட்டியில் வைத்து மறுநாள் சமைப்பது காய்கறிகளில் உள்ள சத்துக்களையும் ஈரப்படுத்தத்தையும் வீணாக்கிவிடும். ஆனால் வேறு வழி இன்றி இப்படி சேமித்து வைப்பவர்கள் கீழ்கண்ட டிப்ஸ்களை முயற்சி செய்து பாருங்கள். இதன் மூலம் காய்கறியில் உள்ள சத்துக்கள் மற்றும் ஈரப்பதம் வீணாவதை ஓரளவு தடுக்க முடியும்.

தோசை ஊற்றும் போது கல்லில் ஒட்டிக்கொண்டு எடுக்க முடியவில்லையா? இந்த டிப்சை ஃபாலோ பண்ணுங்க!

கொத்தமல்லி, புதினா, கீரை போன்ற இலை வகைகளை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கும் பொழுது அதில் உள்ள அழுகிய இலைகள் மற்றும் தண்டுப் பகுதிகளை நீக்கி விட்டு இலைகளை மட்டும் சேமித்து வைக்க வேண்டும். இதனை காற்று புகாதவாறு சேமித்து வைப்பதை விட ஒரு காகித டிஷ்யூ கொண்டோ அல்லது மெல்லிய காட்டன் துணியை கொண்டு சுற்றி வைப்பது நல்லது. இதனை முடிந்தவரை இரண்டு நாட்களுக்குள் பயன்படுத்தி விடுங்கள்.

உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட், முள்ளங்கி போன்ற வேர்ப்பகுதியில் விளையக்கூடிய காய்கறிகளை சேமித்து வைக்கும் பொழுது இதனை தண்ணீரில் போட்டு வைப்பது நல்லது. அப்பொழுதுதான் இதன் நிறம் மாறாமல் இருக்கும். நன்கு குளிர்ந்த புதிய தண்ணீரில் இந்த காய்கறிகளை போட்டு இறுக்கமாக மூடாமல் கொஞ்சம் காற்றோட்டமாக உள்ளபடி மூடி வைத்து விடுங்கள். மறுநாள் வரை நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.

காலிபிளவர் வெட்டிய பிறகு காற்று புகாத டப்பாவிலும், ப்ரோக்கோலி என்றால் வலை போன்ற பையிலும், முட்டைக்கோசை நறுக்கிய பிறகு நெகிழிப் பையிலும் போட்டு சேமித்து வைப்பது நல்லது. இந்தக் காய்கறிகள் ஈரப்பதத்தை எளிதில் இழக்காது என்றாலும் அதிக உணர்திறன் கொண்டவை எனவே இதனை இப்படியே வைத்தால் மறுநாள் வரை புதிது போல இருக்கும்.

கத்தரிக்காய் போன்ற காய்கறிகள் விரைவில் ஆக்சிஜனேற்றம் அடையக்கூடிய தன்மை உடையது. எனவே கத்தரிக்காயை உப்பு மற்றும் மஞ்சள் தூவி சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து சேமித்து வைப்பது சிறந்தது.

இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை தோல் நீக்கி காற்று புகாத கொள்கலனில் வைத்து சேமித்து வைக்க வேண்டும். முருங்கைக்காயையும் துண்டுகளாக நறுக்கி காற்று புகாத கொள்கலன் அல்லது பைகளில் போட்டு சேமித்து வைக்கலாம்.

பட்டாணியை காற்று புகாத கொள்கை வைத்து குளிர்சாதன பெட்டியில் வைத்தால் ஆறு மாதம் வரை தாராளமாக பயன்படுத்தலாம்.

வெங்காயம் மற்றும் தக்காளி போன்ற காய்கறிகளை நறுக்கி குளிர்சாதன பெட்டிகளில் வைப்பதை விட அவற்றை மட்டுமாவது தேவைப்படும் பொழுது அப்போதே நறுக்கிக் கொள்ளுவது நல்லது.

நீங்கள் சூடும் சப்பாத்தி சாஃப்டாக வரவில்லையா? அப்போ மிருதுவான சப்பாத்திக்கு இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணி பாருங்களேன்… காய்கறிகள் அதிக அளவு சத்துக்களை இழப்பதில் இருந்து ஓரளவு தடுத்திடலாம்.

Exit mobile version