உங்க சமையலறையில் சிங்க்-ல் இருந்து துர்நாற்றம் வீசுகிறதா?? அப்போ இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணி துர்நாற்றத்தை விரட்டுங்கள்…!

பலரது சமையல் அறைகளிலும் இன்று பாத்திரம் துலக்க ஏதுவாக சிங்க் வைத்தே கட்டப்படுகிறது. கற்களாலும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்களாலும் பல்வேறு விதங்களில் இந்த சிங்க வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த சிங்கை என்னதான் சுத்தமாக பராமரித்து வந்தாலும் சிலரது வீடுகளில் இந்த சிங்கில் இருந்து துர்நாற்றம் வருவதை தடுப்பது என்பது இயலாத காரியமாக இருக்கிறது. சமையல் அறையில் சிங்கில் இருந்து துர்நாற்றம் வீசினால் அது சமைப்பது, உண்பது என அனைத்து நடவடிக்கைகளையும் பாதிக்கும். எனவே சிங்கில் இருந்து வரும் துர்நாற்றத்தை எப்படி தடுக்கலாம் என்பதற்கு அருமையான சில டிப்ஸ்களை பார்க்கலாம்.

  1. சிங்கில் இருந்து வரும் துர்நாற்றத்தை நீக்குவதற்கு நாம் எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து விட்டு தூக்கி எறியும் தோலை பயன்படுத்தி நீக்க முடியும். இதற்கு எலுமிச்சை பழத்தின் தோலுடன் சிறிதளவு உப்பை சேர்த்து சிங் முழுவதும் நன்கு தேய்த்து விடுங்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரை கொண்டு இதனை அலசி விட்டால் போதும் உங்கள் சிங்கிள் இருந்து வரும் துர்நாற்றம் அடியோடு ஓடிடும்.
  2. இதேபோல் சிங்கில் இருந்து வரும் துர்நாற்றத்தை நீக்குவதற்கு நாம் ஆரஞ்சு பழத்தின் தோலையும் பயன்படுத்தலாம். ஆரஞ்சு பழத்தை உரித்த பிறகு அதன் தோலை தூக்கி எறியாமல் அந்தத் தோலை கொண்டு சிங்க் முழுவதும் நன்கு தேய்த்து கழுவி விட்டால் போதும் சிங்கில் துர்நாற்றம் அறவே இருக்காது.
  3. சிங்கை வழக்கமாக சுத்தம் செய்வது போல சுத்தம் செய்த பிறகு சில நாப்தலின் உருண்டைகளை அதனுள் போட்டு வைத்து விடுங்கள். இதனால் சிங்கில் துர்நாற்றம் நீங்கி நல்ல வாசனை பரவும்.
  4. பேக்கிங் சோடா சிறிதளவு எடுத்து அதனை சிங் முழுவதும் நன்கு தூவி விடுங்கள். தூவிய பிறகு ஐந்து நிமிடங்கள் அது அப்படியே இருக்கட்டும். ஐந்து நிமிடங்கள் கழித்து தண்ணீரைக் கொண்டு கழுவி விடுங்கள். இப்படி செய்வதன் மூலம் துர்நாற்றம் வீசும் சிங்கில் இருந்து துர்நாற்றம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
  5. தண்ணீரில் சிறிதளவு வெள்ளை வினிகரை சேர்த்து இதனை பயன்படுத்தி சிங்கை சுத்தம் செய்யுங்கள். இப்படி செய்வதன் மூலம் துர்நாற்றத்தை நிச்சயம் விரட்ட முடியும்.

மேற்கண்ட டிப்ஸ்களில் உங்களுக்கு எளிமையான ஒன்றை பாலோ செய்து உங்கள் சிங்கில் இருந்து வரும் துர்நாற்றத்தில் இருந்து விடுபடுங்கள்.

Exit mobile version