இனி கடைகளில் வாங்க வேண்டாம்… வீட்டிலேயே பன்னீர் செய்ய அருமையான டிப்ஸ்கள்!

பன்னீர் மிகவும் சத்துக்கள் நிறைந்த உணவு பொருளாகும். பாலில் இருந்து பிரித்து எடுக்கப்படும் இந்த பன்னீர் புரதச்சத்து நிறைந்ததாக இருக்கிறது. மேலும் இந்தப் பன்னீரை வைத்து செய்யும் ரெசிபிக்களும் அத்தனை சுவையாக இருக்கும். பன்னீர் பட்டர் மசாலா, பன்னீர் புலாவ், பன்னீர் ப்ரைட் ரைஸ் என பலவிதமான ரெசிபிகளை நாம் செய்யலாம்.

இந்த ரெசிபிகளுக்கு தேவையான பன்னீரை நாம் எப்பொழுதும் கடைகளில் வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் இனி கடைகளில் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. பன்னீரை வீட்டிலேயே நாம் தயார் செய்ய முடியும். பன்னீர் தயாரிக்க இந்த டிப்ஸ்களை பயன்படுத்தினால் போதும் அட்டகாச மாக கடைகளில் கிடைக்கும் பன்னீர் போன்றே நீங்கள் செய்யலாம்.

1. பன்னீர் தயாரிக்க வேண்டிய பாலில் தண்ணீர் எதுவும் சேர்க்கக் கூடாது. மேலும் பால் நல்ல கெட்டியான பாலாக பார்த்து தேர்வு செய்யவும். அப்பொழுது தான் நமக்கு பன்னீர் அதிக அளவு கிடைக்கும்.

2. தேவையான அளவு பாலை நன்கு காய்ச்சிய பிறகு அதனை திரைய வைக்க வினிகர் அல்லது எலுமிச்சை சாறு பயன்படுத்தலாம். வினிகரின் மணம் பன்னீரில் பரவ வாய்ப்பு உண்டு. எனவே எலுமிச்சை சாறு பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.

3. எலுமிச்சையின் தன்மை பலத்திற்கு பலம் வேறுபடும். எனவே பால் திரையவில்லை என்றால் கூடுதலாக எலுமிச்சை சாறு சேர்த்து பார்த்தால் போதும்.

4. பால் திரிந்து வந்த பிறகு அதனை வெள்ளை துணியில் வடிகட்டி அதன் மேல் ஒரு கனமான பொருளை வைத்தால் எளிமையாக அதில் உள்ள தண்ணீர் வெளியேறிவிடும்.

5. பன்னீர் எந்த வடிவத்திற்கு வர வேண்டுமோ அந்த வடிவத்தில் துணியை மடித்து அதன் மேல் எடை நிறைந்த பொருளை வைக்கலாம்.

6. பன்னீர் தயார் ஆன பிறகு அதனை விருப்பமான வடிவில் நறுக்கி குளிர்சாதன பெட்டியின் ப்ரீசர் பகுதியில் வைத்து விட்டால் அது நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும்.

Exit mobile version