இட்லி, தோசைக்கு மாவு அரைத்த உடனேயே புளிக்க வைக்க அட்டகாசமான டிப்ஸ்!

இட்லி மற்றும் தோசைக்கு அரிசி ஊறவைத்து மாவு அரைத்த பிறகு அதனை குறைந்தது 8 மணி நேரமாவது அப்படியே வைத்து விட வேண்டும். அப்பொழுதுதான் மாவு புளித்து பொங்கி வரும். மாவு புளித்த பிறகுதான் நாம் இட்லியோ தோசையோ சுட முடியும். வெயில் காலத்தில் மாவு சீக்கிரம் புளித்தாலும். மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் மாவு எளிதில் புளிக்காது.

இட்லி சாஃப்டாக வரவில்லையா? பஞ்சு போன்ற மென்மையான இட்லிக்கு இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!

மாவு புளிப்பதற்கு முதலில் அரிசி மற்றும் உளுந்து வீதம் சரியாக இருக்க வேண்டும். நான்கு கப் அரிசிக்கு ஒரு கப் உளுந்து என்ற விதத்தில் அரைத்திருக்க வேண்டும். பிறகு உப்பு போட்டு கைகளால் நன்கு கரைக்க வேண்டும். கைகளில் நன்கு கரைத்தால் தான் மாவு நன்கு புளிக்கும். ஒரு வேலை உங்களுக்கு மாவு உடனடியாக புளித்து வரவேண்டும் என்றால் அதற்கு சில டிப்ஸ் இருக்கிறது. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

புதிதாக அரைத்த மாவுடன் ஏற்கனவே அரைத்து புளித்த மாவு இருந்தால் அதனை கலந்து தோசை அல்லது இட்லி சுடலாம்.

ஏற்கனவே அரைத்த மாவு இல்லாத பட்சத்தில் அரைத்த மாவை மூடி போட்டு அதனை வெயிலில் வைத்து விடலாம். வெயிலில் வைத்தால் ஒரு மணி நேரத்திற்குள் மாவு நன்கு புளித்து பொங்கி வந்திருக்கும்.

ஒரு குக்கரை அடுப்பில் வைத்து புகை வரும் வரை சூடு செய்ய வேண்டும். குக்கர் சூடானதும் அடுப்பை அணைத்த பிறகு தேவையான மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்து குக்கருக்குள் வைத்து மூடி போட்டு விசில் வைத்து விடவும். ஒரு மணி நேரத்திற்கு பிறகு குக்கரை திறந்து பார்த்தால் மாவு குக்கரின் சூட்டில் பொங்கி வந்திருப்பதை பார்க்கலாம்.

மூன்று நான்கு வர மிளகாய்களை மாவின் மேற்புறத்தில் காம்பு படும்படி போட்டு வைத்தால் புதிதாக அரைத்த மாவு சட்டென்று ஒரு மணி நேரத்தில் புளித்து பொங்கி வந்திருக்கும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் வெந்நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு மாவு எடுத்து அதனை அந்த சூடான தண்ணீரில் வைக்க வேண்டும். சிறிது நேரத்தில் கிண்ணத்தில் உள்ள மாவு புளித்து பொங்கி வந்து இருக்கும்.

மேற்கண்ட டிப்ஸ்களில் ஏதேனும் ஒரு வழிமுறையை பின்பற்றி புதிதாக அரைத்த மாவை எளிமையாக புளிக்க வையுங்கள்.

Exit mobile version