சமைத்த உணவில் உப்பு அதிகமாயிடுச்சா? கவலை வேண்டாம்… உப்பை சரி செய்ய உபயோகமான டிப்ஸ்கள்!

சமையலுக்கு மிக முக்கியமான மூலப்பொருளாக இருப்பது உப்பு. உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்று சொல்வார்கள் என்னதான் உணவை பார்த்து பார்த்து சமைத்தாலும் அதில் உப்பு இல்லை என்றால் யாராலும் சாப்பிட முடியாது. அதே போல் தான் உப்பு அதிகமாகி விட்டாலும் உணவின் சுவையே மாறிவிடும். உப்பு கரிக்கும் உணவை யாரும் உண்ண மாட்டார்கள்.

சமைக்கும்பொழுது சில நேரங்களில் உப்பு கூடுதலாக போட்டு விடுவர் அல்லது ஏற்கனவே போட்ட உப்பை மறந்து இரண்டு முறை போட்டு விடுவார்கள் இப்படி செய்வதால் உணவில் உப்பு அதிகமாகி சாப்பிட முடியாதபடி போய்விடும் மேலும் இது உடல் நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும். இப்படி உப்பு அதிகமான உணவை வீணாக்கி விடாமல் அதில் உள்ள உப்பை சரி செய்ய அருமையான டிப்ஸ்களை பார்ப்போம்.

இட்லி, தோசைக்கு மாவு அரைத்த உடனேயே புளிக்க வைக்க அட்டகாசமான டிப்ஸ்!

பச்சை உருளைக்கிழங்கை சதுர வடிவில் நறுக்கி உப்பு அதிகமான குழம்பில் சேர்க்கவும். உருளைக்கிழங்கு உப்பு மற்றும் தண்ணீரை உறிஞ்சி விடும் இதனால் குழம்பில் உப்பின் சுவை குறைந்து இருக்கும்.

எலுமிச்சை சாறு, வெள்ளை வினிகர், ஆப்பிள் சைடர் வினிகர் போன்ற அமிலங்களை உணவில் சேர்க்கும் பொழுது இந்த அமிலங்கள் உப்பின் சுவையை ஓரளவு குறைத்து விடும்.

குழம்பில் கிரீம், தயிர் அல்லது தேங்காய் பால் போன்ற பொருட்களை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டால் உப்பு கரிப்பு ஓரளவு குறைபடும்.

உப்பு அதிகமான குழம்பில் கூடுதலாக தண்ணீர் சேர்த்து தேவையான அளவு காரம் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடலாம். இதனால் உப்பு கரிப்பதை தவிர்க்கலாம்.

கூட்டு, பொரியல் போன்ற உணவு வகைகளில் உப்பு அதிகமாகிவிட்டால் அதில் நாம் தண்ணீரை சேர்க்க முடியாது அதனால் தேங்காய் துருவலை தூவி கிளறி இறக்கினால் உப்பு சுவையை ஓரளவு குறைக்கலாம்.

Exit mobile version