குலாப் ஜாமுன் செய்யும் பொழுது இனி இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்… சூப்பரான குலாப் ஜாமுன் டிப்ஸ்…!

குலாப் ஜாமுன் இந்தியாவில் பிரபலமான ஒரு இனிப்பு வகையாகும். இந்த குலோப் ஜாமுன் முக்கிய பண்டிகை நாட்களில் அனைத்து வீடுகளிலும் தவறாமல் இடம்பெறக் கூடிய ஒரு இனிப்பு வகை. நாவில் வைத்ததும் கரைந்து விடக்கூடிய இந்த குலாப் ஜாமுன் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. பேக்கரிகள், ரெஸ்டாரன்ட்கள் என அனைத்து இடங்களிலும் இந்த குலாப் ஜாமுன் டெசர்டிற்க்கு தனி இடம் உண்டு. குலாப் ஜாமுன் செய்யும் பொழுது சிலருக்கு அந்த குலாப் ஜாமுன் வெடித்து விடும் அல்லது ஒழுங்காக வராது. அப்படி இருக்கும் பொழுது நீங்கள் சில டிப்ஸ்களை ஃபாலோ செய்து குலாப் ஜாமுன் செய்தால் போதும் குலாப் ஜாமுன் அட்டகாசமாக வரும்.

  1. குலாப் ஜாமுன் செய்யும் பொழுது அதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது குலாப் ஜாமுன் மாவை தயாரிக்கும் முறை. மாவு அதிக தண்ணீராக கைகளில் ஒட்டும் படியும் இருக்கக் கூடாது. மிகவும் இறுக்கமாகவும் இருக்கக் கூடாது. அது போல் மாவை பிசையும் பொழுது மென்மையாக பிசைய வேண்டும்.
  2. குலாப் ஜாமுன் மாவு கட்டிகள் ஏதும் இல்லாத படி பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் குலாப் ஜாமுன் விரிசல் இல்லாமல் இருக்கும.
  3. குலாப் ஜாமுன் மாவை உருண்டையாக உருட்டும் பொழுது கைகளில் நெய் தடவி மாவை விரிசல்கள் ஏதும் இல்லாத படி மென்மையாக உருட்ட வேண்டும்.
  4. குலோப் ஜாமுன் மாவை பொரிக்கும்பொழுது எண்ணெய் அதிக சூடாக இருக்கக் கூடாது. மிதமான தீயில் வைத்து தான் பொரித்து எடுக்க வேண்டும்.
  5. குலாப் ஜாமுனுக்கான சர்க்கரை பாகு செய்த பிறகு அதில் ஒரு ஸ்பூன் அளவு தேன் கலந்தால் கூடுதல் சுவையோடு வித்தியாசமாக இருக்கும். அவ்வளவுதான் இந்த டிப்ஸ்களை ஃபாலோ செய்து இந்த தீபாவளிக்கு அட்டகாசமான குலோப்ஜாமுனை செய்து மகிழுங்கள்.
Exit mobile version