சமைக்கத் தெரியாதவர்கள் கூட சமையல் அறையில் ராணியாக மாற வேண்டுமா? அசத்தலான பத்து சமையல் டிப்ஸ்…

சமையல் என்பது ஒரு விதமான கலை. . அதை தொடர் முயற்சியில் போது மட்டுமே சாதிக்க முடியும். நம் வீட்டில் உள்ளவர்களுக்கு உணவை சுவையாக மட்டுமல்லாமல் சத்து நிறைந்ததாக கொடுக்க வேண்டும் என்பது அனைவரின் கனவு. மிகவும் சிரமப்பட்டு சமைக்கும் சில உணவு முறைகளில் சிலவகையான டிப்ஸ்களை பயன்படுத்தி எளிமையாக மாற்றி எளிதில் சமைத்து முடித்து விடலாம். அப்படி சமையலறையின் ராணியாக மாற அருமையான 10 சமையல் டிப்ஸ்…

உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை வைத்து கறி சமைக்கும் பொழுது அதிகப்படியாக எண்ணெயை பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் எளிதில் ஜீரணம் ஆகாது.

கேரட், பீட்ரூட் வாடி போனால் அதை நறுக்குவது கடினம். அந்த நேரத்தில் வாடிப்போன கேரட் மற்றும் பீட்ரூட்டை உப்பு கலந்த தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து விட வேண்டும். அதன்பின் கேரட் மற்றும் பீட்ரூட்டை நறுக்குவதற்கு புதிது போல எளிமையாக இருக்கும்.

வெண்டைக்காயின் காம்பையும், தலை பாகத்தையும் நறுக்கிவிட்டு பதப்படுத்தி வைத்தால் மறுநாள் சமைப்பதற்கு முற்றிப் போகாமல் புதுமையாக இருக்கும்.

தயிர் மற்றும் மோர் பாத்திரங்களை சுத்தம் செய்து வெயிலில் சிறிது நேரம் காய வைத்து அதன் பின் பயன்படுத்தினால் பாத்திரத்தில் தயிர் மற்றும் மோர் வாடை இருக்காது.

தோசை மாவு அரைக்கும் பொழுது ஒரு கைப்பிடி ரவை சேர்த்து அரைத்தால் தோசை பார்க்கும் பொழுது நன்கு சிவந்து மொறுமொறுவென வரும் சாப்பிடுவதற்கும் சுவை அருமையாக இருக்கும்.

மிளகாயை வறுக்கும் பொழுது ஏற்படும் நெடியை தவிர்க்க சிறிது உப்பு சேர்த்து வறுத்தால் எந்த நெடி வராது.

எந்த சூப் செய்தாலும் சிறிதளவு பொட்டுக்கடலை மாவை தண்ணீரில் கரைத்து சூட்டுடன் சேர்த்து செய்து பாருங்கள். சூப் கெட்டியாகவும் டேஸ்டாகவும் இருக்கும்.

கூட்டு, பொரியல், வறுவல் என எது சமைத்தாலும் அதில் காரம் மற்றும் உப்பு அதிகரித்து விட்டால் சிறிதளவு ரஸ்க் தூளை கொடி யாக மாற்றி சமையலில் சேர்த்து கலந்து விடுங்கள். அது அந்த பொரியல் மற்றும் கூட்டில் உள்ள உப்பு காரத்தை இழுத்துக் கொள்ளும்.

விடுமுறை நாட்களில் ஸ்பெஷல் ஆக மாற்ற வேண்டுமா? வாங்க காரசாரமான கிராமத்து ஸ்டைல் மிளகு கோழி பிரட்டல்!

சாம்பார் வைக்கும் பொழுது துவரம் பருப்புடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு வெந்தயம் சேர்த்து வேகவைத்து சமைத்து பாருங்கள். காலையில் சாம்பார் வைத்திருந்தாலும் இரவு வரைக்கும் கெட்டுப் போகாமல் பிரஷாக இருக்கும்.

வத்த குழம்பு மற்றும் அசைவ குழம்பு வகைகள் சமைக்கும் பொழுது கடைசியாக சிறிதளவு மிளகுத்தூளை சேர்த்து கலந்து விட்டு இறக்கினால் மனம் மற்றும் சுவை சிறப்பாக இருக்கும்.

Exit mobile version