சப்பாத்திக்கு மிகப் பொருத்தமான ஸ்பெஷல் ஆலு கோபி கிரேவி!

சப்பாத்திக்கு விதவிதமான சைடிஸ் வைத்திருந்தாலும் ஆலு கோபி கிரேவி பொருத்தமான ஒன்றாகும். வட இந்தியா பகுதிகளில் அதிகமாக சமைக்கும் இந்த ஆலு கோபி கிரேவி நம் வீடுகளில் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – ஒரு கப்
காலிஃப்ளவர் – ஒரு கப்
தயிர் – இரண்டு கப்
மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் – ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய் – மூன்று தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிய துண்டு
கஸ்தூரி மேத்தி – ஒரு தேக்கரண்டி
வெங்காயம் – 2
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும். அதில் கழுவி நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் காலிபிளவர் சேர்த்து பொன்னிறமாக பறக்க வேண்டும்.
அடுத்ததாக இரண்டு கப் தயிரில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து ஒரு சேர கிளற வேண்டும்.

மீண்டும் ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து அதில் சீரகம்,வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். அடுத்ததாக இஞ்சி சேர்த்து வாசனை வரும் வரை வதக்கிக் கொள்ளவும். இதை அடுத்து கஸ்தூரி மேத்தி சேர்த்து வதக்க வேண்டும். இப்பொழுது நாம் காரம் சேர்த்து கலக்கி வைத்திருக்கும் தயிரை கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இனி நம்ம வீட்டிலயும் ட்ரை பண்ணலாம் இத்தாலியன் ஸ்டைல் சீஸ் பாஸ்தா!

இதில் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும். நாம் வதக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் காலிபிளவர் சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது இந்த கலவையை மூடி போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.

15 நிமிடத்திற்கு பின் வாசனைக்காக மல்லி புதினா இலைகளை தூவி பரிமாறினால் சுவையான ஆலு கோபி மசாலா தயார்.

Exit mobile version