ஐந்தே நிமிடத்தில் டேஸ்டான, மிருதுவான பிரட் புட்டிங்! குழந்தைகளுக்கு பிடித்தமான ரெசிபி இதோ!

மாலை வேலைகளில் குழந்தைகளுக்கு பிடித்தமான பிரட் வைத்து சுவையான புட்டிங் ஒன்று செய்து கொடுத்து அசத்தலாம் வாங்க.

முதலில் இந்த பிரட் புட்டிங் செய்வதற்கு கால் கப் சர்க்கரையை ஒரு கடாயில் சேர்த்து கேரமல் ஆக உருக்கி எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின் நாம் புட்டிங் எந்த பாத்திரத்தில் செய்யப் போகிறோமோ அதன் அடிப்பகுதியில் இந்த கேரமலை சேர்த்து அனைத்து பக்கங்களில் படும் அளவிற்கு பரப்பிக் கொள்ளவும். அதன்பின் இரண்டு பிரட் துண்டுகளை பொடிப்பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் ஒரு கப் பாலுடன் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்ததாக மற்றொரு பாத்திரத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி சாக்லேட் எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை மற்றும் பாலுடன் சேர்த்து அரைத்த பிரட் கலவையை இதில் சேர்த்துக் கொள்ளவும். இந்த கலவையை இனிப்பு கேரமல் ஊற்றி வைத்திருக்கும் பாத்திரத்திற்கு மாற்றி சமப்படுத்தி கொள்ளவும்.

ரம்ஜான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி! சத்தான சிறுதானிய வைத்து நம் வீட்டிலேயே செய்வதற்கான அசத்தல் ரெசிபி!

இறுதியாக இந்த பாத்திரத்தை நன்கு மூடி குறைந்தது 30 நிமிடம் நீராவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். 30 நிமிடம் கழித்து இதை உடனே திறந்து விடாமல் பத்து முதல் 15 நிமிடம் ஆற வைத்து அதன் பின் ஒரு பாத்திரத்திற்கு மாற்றி மெதுவாக திறந்து பார்த்தால் சுவையான பிரட் புட்டிங் தயார்.
சுவையில் அருமையாக இருக்கும் இந்த பிரட் புட்டிங் குழந்தைகளுக்கு பிடித்தமான ஸ்னாக்ஸ் வகைகளில் ஒன்றாக மாறிவிடும்.

Exit mobile version