காரசாரமாக சாப்பிட தோணும் பொழுது நம்மில் பலருக்கும் பிடித்தமான ஒரு குழம்பு வகை தான் வத்த குழம்பு. பொதுவாக வத்த குழம்பு செய்யும் பொழுது சற்று அதிகமாகவே நம் வீடுகளில் செய்வது வழக்கம். அதற்கு காரணம் இந்த வத்த குழம்பு இட்லி, தோசை முதல் சாதம் என அனைத்திற்கும் சிறப்பாக இருக்கும். மேலும் இந்த வத்த குழம்பை நாம் ஓரிரு நாட்கள் வைத்துக் கூட சாப்பிடலாம். இதில் சுண்டைக்காய் சேர்க்கும் பொழுது அதன் சுவை சற்று கூடுதலாக இருக்கும். இப்படி சொல்லும் பொழுதே நாக்கில் வெற்றி ஊறும் கிராமத்து ஸ்டைல் வத்த குழம்பு ரெசிபி இதோ.
செய்ய தேவையான பொருட்கள்
காய்ந்த சுண்டவத்தல் – 50 கிராம்
சின்ன வெங்காயம் – 10 முதல் 15
தக்காளி – 2
வெள்ளைப் பூண்டு – பத்து முதல் 20
கடலைப்பருப்பு – இரண்டு டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
வத்தல் – 10
மல்லி – 50 கிராம்
எள் – ஒரு தேக்கரண்டி
மிளகு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒன்றை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை – கையளவு
எண்ணெய் – 3 தேக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
பெருங்காய பொடி – இரண்டு சிட்டிகை
புளி – எலுமிச்சை பழ அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு வானொலியை அடுப்பில் வைத்து சூடேற்றிக் கொள்ளவும். அதில் கடலைப்பருப்பு, உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அத்துடன் மல்லி, வத்தல், மிளகு, சீரகம், கருவேப்பிலை, எள் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.
வறுத்த இந்த பொருட்களை சூடு ஆறும் வரை ஓரமாக வைக்க வேண்டும். அதன் பின் மிக்ஸியில் சேர்த்து நன்கு மையாக அரைத்து கொள்ள வேண்டும்.
அதன் பின் வானொலியில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் தாளிப்பிற்காக கடுகு, வெந்தயம் சேர்த்துக் கொள்ளவும். இரண்டும் நன்கு பொறிந்த உடன் கறிவேப்பிலை சேர்த்து கொள்ள வேண்டும். அதன் பின் உரித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நன்கு அதை ஒரு நிமிடங்கள் வதக்கி விட வேண்டும். அதன் பின் பூண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டும் எண்ணெயில் பொன்னிறமாக வதங்க வேண்டும். அதன் பின் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும் அடுத்து இந்த கலவையுடன் மஞ்சள் தூள், காயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன் பின் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா கலவையை அதில் சேர்த்து நன்கு எண்ணெயில் வதக்க வேண்டும்.
வாசனை வரும் வரை வதக்கினால் போதும். அதன் பின் புளி கரைச்சலை இந்த கலவையினுள் சேர்த்து நன்கு கிளற வேண்டும். இப்பொழுது தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த கலவையை ஒருபுறம் மூடி போட்டு கொதிக்க விட வேண்டும். மற்றொருபுறம் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றி அதில் சுண்டகாய்களை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அதை ஒன்றே இரண்டாக பொடியாக மாற்றிக் கொள்ளவும்.
வத்தக்குழம்பு நன்கு கொதித்து வரும் பொழுது இந்த சுண்டைக்காய்களை சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும். கடாயில் ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வந்தால் குழம்பு தயாராகி விட்டது. இதில் வாசனைக்காக மல்லி இலைகளை சேர்த்துக் கொள்ளலாம்.
இப்பொழுது நமக்கு சுவையான கிராமத்து ஸ்டைல் வத்த குழம்பு தயார். இதை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது மிக அருமையாக இருக்கும்.