குளிர்ந்த நீரில் தினமும் குளித்து தலையை சுத்தப்படுத்த வேண்டும்.

முட்டை,  கீரை,  மீன்  போன்ற புரதச்சத்து அதிகமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாள் ஒன்றுக்கு  குறைந்தபட்சம் மூன்று லிட்டர் அளவு தண்ணீர்  குடிக்க வேண்டும்.

வாரத்தில் இருமுறை தலைக்கு  ஹேர் மாஸ்க் பயன்படுத்த வேண்டும்.

தினமும் காலை மாலை குறைந்தது ஐந்து நிமிடம் தலைக்கு மசாஜ் கொடுக்க வேண்டும்.

குறைந்தது  4 முழு நெல்லிக்காய்  சேர்த்து ஜூஸ் செய்து குடித்து வரலாம்.

முளைகட்டிய பயிறு வகைகளை வாரத்தில் மூன்று முறை தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

தலை முடியை இறுக்கமாக வழித்து வராமல் சற்று இளக்கமாக வாரி சடை போட்டுக்  கொள்ள வேண்டும்.

தலையை எப்பொழுதும் சுத்தமாகவும் பேன், ஈறு  போன்றவை இல்லாமல் பராமரிக்க வேண்டும்.